நாணங்கெட்ட அம்மணப்பயணம்..!
ஆடைகளைப் பெற்றிராத கற்கால மனித இனம் இலை தழைகளைக் கொண்டு தன் பாலுறுப்புக்களை மறைத்து வெட்க உணர்வுகளை நாகரீகமாக வெளிப்படுத்தினர் என்பதே வரலாறு. நாகரீகக் கோபுர உச்சியை அடைந்து விட்டோம் என பறைசாற்றிப் பீற்றிக்கொள்ளும் மேற்கத்திய நாகரீகமோ கற்கால நாகரீகத்தையும் உடைத்தெறிந்து படு வேகமாக பின்னோக்குகிறது ஆடை நாகரீகத்தில்.
மேலைநாட்டு கலாச்சார நாகரீகத்திற்கு பிறந்த மேனி- முழு நிர்வாண உணர்வு புதியதல்ல அந்த உள்ளுணர்வில் மேலும் ஒரு முன்னேற்றம்!?
முழு நிர்வாணமாக- அம்மணமாகப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்காக தனி விமான ‘சேவை’ ஒன்றை நடத்தவுள்ளது காஸ்ட் அவே டிராவல்ஸ் என்ற அமெரிக்கா நிறுவனம். அமெரிக்காவிலுள்ள மியாமியிலிருந்து மெக்ஸிகோவிலுள்ள கன்குன் வரை 3 தனி விமானப் பயணங்களுக்கு இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
அம்மணப் பயணத்திற்கான நிபந்தனை 1.
விமானத்தில் ஏறும்வரை ஆடைகள் அணிந்து ஏறவேண்டும் விமானம் ஒரு நிலையான உயரத்திற்கு வந்த பிறகு அனைவரும் ஆடைகளைக் களைந்துவிட்டு பிறந்த மேனியுடன் அம்மணப்பயணம் செய்யலாம்.
நிபந்தனை 2.
கன்குன் ஓய்வு தளத்திற்கு அழைத்துச் செல்லப்படும் பயணிகள் தங்கும் விடுதியின் உணவகம் வரவேற்பறைப் பகுதிகளைத்தவிர பிற இடங்களில் அம்மணமாக சுற்றித் திரியலாம் ஒரு வார காலத்திற்கு இந்நிர்வாணக் கூத்தடிக்கலாம். என்று அந்நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.
இந்த அம்மண கும்மாளத்திற்கு ஏற்பாடு செய்த அந்நிர்வாண நிறுவனம் இதன் மூலம் மனித குலத்திற்கு என்ன சீர்திருத்தத்தை முன் வைக்கிறது என்ற ஆய்வில் இறங்கினால் சீர் கேட்டைத்தவிர வேறு முடிவை எட்டமுடியாது. வித்தை காட்டும் நிறுவனம்’ அருங்காட்சி நிறுவனம்’ பொருட்காட்சி நிறுவனம்’ நாடகக் காட்சி நிறுவனம்’ திரைப்படக் காட்சி நிறுவனம்’ இன்னும் இதுபோன்ற காட்சிகளை காட்டும் நிறுவனங்களின் விளம்பரம் போல் விமானப் பயணத்தின் முழு நிர்வாணக் காட்சிக்கு விளம்பரப்படுத்தி ‘அம்மண காட்சிக்கு’ அழைக்கிறது காஸ்ட் அவே டிராவல்ஸ் நிறுவனம்.
வித்தை காட்ட சிலபேர் இருந்தால் அதை வேடிக்கைப் பார்க்கக் கூட்டம் திரண்டு வரும் என்ற தொழில் முறை இங்கு கையாளப்படுகிறது. வித்தைக் காட்சிக் கூடாரத்தில் ஆடையணிந்தவர்களோடு ஆடைகள் தேவையற்ற வன விலங்குகளின் வேடிக்கைக் காட்சியைப்போல் ஆகாய வாகன கூடாரத்தில் ஆடைகள் அவிழ்த்த மனித விலங்குகள் வேடிக்கைக் காட்சியாகின்றன.
பார்க்கவே கண் கூசும் இப்படியொரு கண் கொள்ளா அம்மணக்காட்சி பணத்திற்கு (ஸாரி எழுத்துப்பிழை) பயத்திற்கு (மீண்டும் எழுத்துப்பிழை) பயணத்திற்கு சேவையின் அடிப்படையில் ஏற்பாடு செய்த அமெரிக்கா க.அ.டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் நாம் கேட்டு தெளிவு பெற வேண்டிய சந்தேகங்களும். அவர்களின் சேவையின்!? வளர்ச்சிக்கு சில ஆலோசனைகளும்.
சந்தேகம்.
விமானப் பிரயாணிகள் மட்டும் தான் நிர்வாணமாகவா?
விமானப்பணி ஆண்கள்- பெண்கள் மற்றும் விமான இயக்குனர்- உதவி இயக்குனர்களும் அம்மணத்தில் அடங்குவார்களா? (ஏனெனில் நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் வேடிக்கையாகி விடுவான்.)
எல்லா இடங்களில் ஒழிந்து கொண்ட ‘வெட்கம்’ உணவகத்திலும் வரவேற்பறையிலும் மட்டும் ஏன் எட்டிப்பார்க்கிறது?
ஆலோசனை.
விமானத்தில் ஏறும்வரை ஆடை அவிழ்ப்புக் கூடாது என்பதை விமானத்தளம் வரை என்றாக்கி பின்பு வீட்டிலிருந்தே… என்றாக்கினால் உங்கள் சேவை சிறப்பாக வளரும் வருமானமும் தான்.
வெட்கங்கெட்ட ஜென்மங்கள்.
எந்த இடங்களிலும் எப்படிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையிலும் உயிரற்ற மனித பிரேதத்தைக் காண நேர்ந்து அதன் ஆடைகள் விலகியிருந்தால் அதை சரிபடுத்தியும் ஆடைகளே இல்லாமலிருந்தால் மறு ஆடைகொண்டு மறைப்பதுமே மனித பண்பாடு.
மண்ணோடு மண்ணாகி மக்கிப்போகும் உடம்பிற்கு ஆடைகள் எதற்கு? என்று இறந்தவர்களை மண்ணில் புதைப்பவர்கள் எண்ணுவதில்லை. அதுபோல் சாம்பலாகிவிடும் உடலுக்கு உடைகள் ஏன்? என்று இறந்தவர்களை எரிப்பவர்களும் எண்ணுவதில்லை.
இறந்த மனித உடலுக்கும் உடை உடுத்தி வழியனுப்பும் மனித ஜென்ம மத்தியில் எந்நாளும் பிறந்தமேனியை – திறந்தமேனியை விருப்ப உணர்வாகக் கொண்டலையும் நடை பிணங்கள் என்ன ஒரு ஜென்மமோ? ஒரு சொட்டு என்று சொல்லும் அளவிற்குக் கூட இல்லாமல் நாணத்தை- வெட்கத்தை முற்றாக இழந்த முழு நிர்வாண விரும்பிகள் ஆடையணிந்த பிணத்திற்கும் சமம் இல்லை.
-முஹை
www.seidhialaigal.com
AyVmaS <a href="http://kxfmccyglxns.com/" rel="nofollow">kxfmccyglxns</a>, [url=http://csiwojkoyklu.com/]csiwojkoyklu[/url], [link=http://qijuxvnafhvt.com/]qijuxvnafhvt[/link], http://uexpqczpevdd.com/