பாலஸ்தீனர்களால், பாலஸ்தீனத்துக்கே அவமானம்.
பாலஸ்தீனத்தில் உள்ள சில வர்த்தக முதலாளிகள் பலர் இஸ்ரேலியர்களுக்கு பெருஞ்சுவர் கட்ட கருப்புச் சந்தையில் சிமெண்ட் விற்று பல மில்லியன் சம்பாதித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரஃபாத் அறிந்தே நடந்துள்ளது என்றக் குற்றச்சாட்டு உலகத்தார் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாலஸ்தீனத்தைச் சார்ந்த அரசியல் சட்ட ஆலோசகர் ஹசன் கிரைஷே (Hassan Kreishe) என்பவர் இந்த பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதை லன்டனில் இருந்து வெளியாகும் ‘சண்டே டெலிகிராப்’ (Sunday Telegraph) என்னும் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். அவர் இந்ந குற்றத்தை ‘ மனித நேயத்துக்கு எதிரான குற்றம்’ ( Crime Against Humanity) என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது ‘பாலஸ்தீனத்தில் பல தொழில் அதிபர்கள் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுத்து அரசியல் சட்டத்துக்கு புறம்பாக லைசன்ஸ் பெற்றிருக்கிறார்கள்’ என்று தெரிவிக்கிறார். மேலும் அவர் யாசர் அரஃபாத்தின் அமைச்சரவை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஹசன் கிரைஷே ஆரம்பம் முதலே யாசர் அரஃபாத் அரசாங்கத்தை விமர்சித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தில் ஒரு புறம் இஸ்ரேலியர்களால் கட்டப்பட்டு வரும் பெருஞ்சுவருக்கு பெரும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இதை உலக நீதிமன்றமும் நிறுத்துமாறு இஸ்ரேலியருக்கு உத்தரவிட்டுள்ளது. ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவிப்பதும், மறுபக்கம் இஸ்ரேலியருக்கு உதவுவதுமாக இரட்டை வேடம் போடுவதாக பாலஸ்தீனத் தேசிய குழு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு சிமெண்ட் வாங்கி வரும் அறிக்கையை பார்க்கும் பொழுது அதிர்ச்சிகரமாக உள்ளது, 2003ம் வருடத்தில் எகிப்திலிருந்து மொத்தம் 420,000 டன் எடை மதிப்புக்கு சிமெண்ட் வாங்கப்பட்டுள்ளது, ஆனால் வெறும் 33,000 டன் எடை அளவு சிமெண்ட் மட்டுமே பாலஸ்தீன சந்தையில் விற்கப்பட்டுள்ளதாக தெரிய முடிகிறது. மேலும் சிமெண்ட் போன்ற பொருட்கள் எகிப்து கம்பெனிகளால் சலுகை விலையில் இஸ்ரேலியர்களால் இடிக்கப்பட்ட இடங்களை சீரமைப்பதற்காக குறைந்த விலையில் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த வர்த்தகத்தில் பாலஸ்தீன முதலாளிகள் குறைந்தது 15 முதல் அதிகபட்சமாக 100 டாலர்கள்வரை ஒரு டன்னுக்கு சம்பாதித்து இருப்பார்கள் என்று அறிய முடிகிறது. இந்தக் காரியத்தில் மிகப் பெரிய மூன்று நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளன, ஆனால் அந்நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
மேலும் இந்ந சம்பவத்தைப் பற்றி பாலஸ்தீன தேசிய குழு கருத்துக் கூறுகையில் இந்தப் பிரச்சினை இப்பொழுது அட்டர்னி ஜெனரல் வசம் சென்று விட்டது, அதனால் கருத்துக் கூறமுடியாது என்று தெரிவித்து விட்டனர். இந்தப் பிரச்சினையில் எகிப்தை சார்ந்த புலனாய்வு பத்திரிக்கைத் தலையிட்ட பின்புதான் ஜெர்மனியைச் சார்ந்த யூத வர்த்தகர்களுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ளவர்களுக்கும் உள்ள தொடர்பை ஆராயும்படி பாலஸ்தீன தேசிய குழு உத்தரவிட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த குற்றச்சாட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. சில பணக்கார சுயநலவாதிகளால் மொத்த பாலஸ்தீனமே தலைகுனியும்படி ஆகிவிட்டது.
-அபூ ரஃபிஹஷ்மத்
“பாலஸ்தீனர்களால் பாலஸ்தீனத்துக்கே அவமானம்” என்ற தலைப்பு பொருத்தமாகத் தெரியவில்லை. ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தை அல்லது பாலஸ்தீனர்களை குற்றச்சாட்டுவது எப்படி நியாயமாக இருக்கும்? அதே நேரத்தில் குறிப்பிட்ட தவறுக்கு உரியவர்களை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
பாலஸ்தீன வரலாற்றை அறிய இங்கு சொடுக்கவும்.
அன்புடன்
மாஃபியா