Archive for August 2004

You are browsing the archives of 2004 August.

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக நாடகம்

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக நாடகத்தை அமெரிக்கா தயாரிக்கிறது! ஆப்கானிஸ்தானில் அதிக அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் முதலில் ஜூன் மாதம் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது, அது இருமுறை தாமதப்படுத்தப்பட்ட பின்னர் அக்டோபர் 9ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஜூன் மாதத்தில் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல்களும் அடுத்த ஏப்ரல் வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு சீனாவை சீர்குலைத்துள்ளது!

சீனாவில் கிடைக்கின்ற மலிவு ஊழியத் தொழிலாளர்களை பெருமளவில் பயன்படுத்திக் கொள்வதற்காக அதிவேகமாக வெளிநாட்டு முதலீடுகள் வந்து குவிந்ததால் நாட்டின் அடிப்படை உடகட்டமைப்பு சீர்குலைகின்ற அளவுக்கு கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத மிகவும் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை நெருக்கடி உருவாகியுள்ளது.

மக்கள் தொகை – மாறிவரும் நிலைப்பாடுகள்.

நாட்டின் மிக முக்கியப் பிரச்னையாகவும் – பிற பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணமாகவும் இந்திய அரசாலும் அரசியல்வாதிகளாலும் கூறப்படுவது மக்கள் தொகைப் பெருக்கம் ஆகும். இதையே மீடியாக்களும் முடிந்த அளவுக்கு ஊதிக்கொண்டிருக்கின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகைப் பெருக்கம் தடையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஊழல்வாதிகளும், ஊழலை ஒழித்துக்கட்ட இயலாத அரசியல் சட்டஅமைப்பும் ஒளிந்து கொள்வதற்குக் கிடைத்த உதவாக்கரை காரணம் தான் மக்கள் தொகைப் பெருக்கம் என்று நிரூபிக்கும் முகமாக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பகத் தலைவர் ஏ.ஆர். நந்தா [...]

சவூதி அரேபியாவில் இந்தியர்களுக்கான ஹெல்ப்லைன்.

இந்திய வெளியுறவுத் துறையின் இணைஅமைச்சர் திரு. E.அஹமது அவர்களின் சமீபத்திய சவூதி வருகையை தொடர்ந்து அவருடைய தூண்டுதலுக்கிணங்க சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதரகம் சவூதிவாழ் இந்திய மக்களுக்கு உதவும் பொருட்டும் இந்தியர்களின் நீண்டநாளைய எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் பொருட்டும் -ஹெல்ப்லைனை- துவங்கியுள்ளது. 966-1-4881982 மற்றும் 4884697 போன்ற தொலைபேசி எண்களில் இந்தச் சேவையைப் பெறலாம். இந்தச் சேவையைத் துவங்கி வைத்துப் பேசிய சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதர் திரு. கமாலுதீன் அஹமது அவர்கள் -இந்தியர்களின் நீண்ட நாளைய [...]