Archive for May 2004

You are browsing the archives of 2004 May.

அபூ குரைப் சித்ரவதைகள்

ஓர் அமெரிக்க பிரஜையின் உள்ளக் குமுறல் ரமோனா ஷஷானி, மனித உரிமை ஆர்வலர், கலிஃபோர்னியா (அரப் நியூஸ் 27-5-2004) தமிழில்: அப்துல்அலீம் சித்தீக் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அதிர்ச்சியினால் உறைந்து போனார்கள். பாக்தாத் நகருக்கு வெளியில் உள்ள அபூ கரீப் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிற அப்பாவி இராக்கிய கைதிகளின் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் கட்டவிழ்த்துள்ள மனிதகுலமே வெட்கித் தலைக்குனியக் கூடிய – காண்பதற்கும், கேட்பதற்கும் நமது புலன்கள் கூசக்கூடிய, கொடூரமான சித்திரவதைகள் பற்றிய செய்திகள் உலகின் [...]

நாணங்கெட்ட அம்மணப்பயணம்..!

ஆடைகளைப் பெற்றிராத கற்கால மனித இனம் இலை தழைகளைக் கொண்டு தன் பாலுறுப்புக்களை மறைத்து வெட்க உணர்வுகளை நாகரீகமாக வெளிப்படுத்தினர் என்பதே வரலாறு. நாகரீகக் கோபுர உச்சியை அடைந்து விட்டோம் என பறைசாற்றிப் பீற்றிக்கொள்ளும் மேற்கத்திய நாகரீகமோ கற்கால நாகரீகத்தையும் உடைத்தெறிந்து படு வேகமாக பின்னோக்குகிறது ஆடை நாகரீகத்தில். மேலைநாட்டு கலாச்சார நாகரீகத்திற்கு பிறந்த மேனி- முழு நிர்வாண உணர்வு புதியதல்ல அந்த உள்ளுணர்வில் மேலும் ஒரு முன்னேற்றம்!? முழு நிர்வாணமாக- அம்மணமாகப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்காக [...]

திரை மறைவு ஆளுமையில் உலகம்!

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து அரை நூற்றாண்டு நிறைவுப் பெற்று விட்ட நிலையிலும் மக்கள் முன்னேற்றத்தில் ஒரு மகா தேக்கநிலை நிலைத்து நிற்பதை உணராத அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது. ஓரு பரந்த முன்னேற்றம் இல்லை என்றாலும் மக்கள் பதட்டமில்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களா.. என்று பார்க்கும் போது உலக நாடுகளில் குறிப்பாக வல்லரசுகளிலும் அதன் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாடுகளிலும் உள்ள மிக மிக சொற்பமான மக்களே நிம்மதியான சுகபோக வாழ்வை [...]