மக்கள் தொகை – மாறிவரும் நிலைப்பாடுகள்.
நாட்டின் மிக முக்கியப் பிரச்னையாகவும் – பிற பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணமாகவும் இந்திய அரசாலும் அரசியல்வாதிகளாலும் கூறப்படுவது மக்கள் தொகைப் பெருக்கம் ஆகும். இதையே மீடியாக்களும் முடிந்த அளவுக்கு ஊதிக்கொண்டிருக்கின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகைப் பெருக்கம் தடையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஊழல்வாதிகளும், ஊழலை ஒழித்துக்கட்ட இயலாத அரசியல் சட்டஅமைப்பும் ஒளிந்து கொள்வதற்குக் கிடைத்த உதவாக்கரை காரணம் தான் மக்கள் தொகைப் பெருக்கம் என்று நிரூபிக்கும் முகமாக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பகத் தலைவர் ஏ.ஆர். நந்தா [...]
தமிழ்நாடு-கும்பகோணம் தனியார் பள்ளிக்கூடத்தில் தீவிபத்து, 90 குழந்தைகளைக் கொன்றது.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 90 குழந்தைகள் இறந்தது நாடுமுழுவதும் தனியார் மற்றும் பொதுத்துறை பள்ளிகளின் திகைப்பூட்டும் நிலையை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறது. இந்தத் துயரச் சம்பவம் பதினைந்து ஆண்டுகால சந்தை சீர்தீருத்தங்களின் விளைபயன்களுள் ஒன்றாகும். இச்சீர்திருத்தங்கள் ஏற்கெனவே போதாதிருக்கின்ற பொதுக் கல்வி முறையைத் தொடர்ந்து சீரழிவுக்கும், மட்டரகமான மற்றும் பெரும்பாலும் ஒழுங்கு செய்யப்படாத கட்டிடங்களில் வழமையாய் கூட்ட நெரிசலில் மிகுந்த தனியார் பள்ளிக்கூடங்கள் பல்கிப் பெருகுதலுக்கும் வழி வகுத்திருக்கிறது. இவற்றில் ஒன்றுதான் தமிழ்நாடு [...]
இந்தியா பட்ஜெட், ஆதரவு ஏழைகளுக்காகவா..? வர்த்தகர்களுக்காகவா..?
காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் புதிய அரசாங்கம் ஜூலை 8ம்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட், கிரமப்புற மற்றும் நகர்வாழ் ஏழை மக்களை ஏமாற்றுகின்ற கண்கட்டி வித்தையாக இருக்கிறது. அவர்களில் பலர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். முந்தைய நிர்வாகத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களித்தனர். நிதியமைச்சர் பழனிப்பன் சிதம்பதரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பெருவர்த்தக நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் மீண்டும் உறுதியளிக்கின்ற வகையில் அமைந்திருக்கிறது. முன்பு ஆட்சி [...]
பாரதப் பிரதமரின் பயோடேட்டா.
அரைக்குடம் தளும்பும் நிறைக்குடம் தளும்பாது என்று ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள் என்னவென்றால் அதிகம் படித்தவர்கள் அடக்கத்துடன் செயற்கரிய செயல்களின் மூலம் தங்களது சாதனைகளை எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி நிகழ்த்துவார்கள் என்பதுதான். இந்த பழமொழிக்கு நிகழ்கால உதாரணமாக சமீபத்தில் பெரும் பரபரப்புக்கிடையே அமைதியே உருவாக இருந்து பாரத தேசத்தின் உயரிய பதவியான பிரதம மந்திரிக்கான பதவிக்கு எதிர்ப்பே இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பொறுப்பாற்றி வரும் டாக்டர் மன்மோகன் சிங் ஆவார். இந்த பதவிக்கு வருவதற்கு முன் [...]