பொதுவானவை

இந்திய ஆராய்ச்சியாளரின் வேண்டுகோள்

சர்வதேச ஹிஜ்ரா நாட்காட்டியை முஸ்லிம்களுக்கு அறிமுகப்படுத்தி அனைவரும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட உதவ வேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்களின் கூட்டமைப்புக்கு அலி மனிக்ஃபான் என்ற இந்திய ஆராய்ச்சியாளர் கேட்டுக்கொண்டார். இந்திய ஹிஜ்ரா கமிட்டியின் (கோழிக்கோடு) அமைப்பாளரான அவர், புனித உம்ரா பயணத்திற்கிடையில் மக்காவின் நுழைவாயில் எனப் போற்றப்படும் ஜித்தா நகரில் நடைபெற்ற பல பத்திரிக்கை சந்திப்புகளிலும், பல்வேறு பிறை கருத்தரங்குகளிலும் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.