You are browsing the archives of ஆனந்தன்.
கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு சீனாவை சீர்குலைத்துள்ளது!
சீனாவில் கிடைக்கின்ற மலிவு ஊழியத் தொழிலாளர்களை பெருமளவில் பயன்படுத்திக் கொள்வதற்காக அதிவேகமாக வெளிநாட்டு முதலீடுகள் வந்து குவிந்ததால் நாட்டின் அடிப்படை உடகட்டமைப்பு சீர்குலைகின்ற அளவுக்கு கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத மிகவும் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை நெருக்கடி உருவாகியுள்ளது.
தமிழ்நாடு-கும்பகோணம் தனியார் பள்ளிக்கூடத்தில் தீவிபத்து, 90 குழந்தைகளைக் கொன்றது.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 90 குழந்தைகள் இறந்தது நாடுமுழுவதும் தனியார் மற்றும் பொதுத்துறை பள்ளிகளின் திகைப்பூட்டும் நிலையை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறது. இந்தத் துயரச் சம்பவம் பதினைந்து ஆண்டுகால சந்தை சீர்தீருத்தங்களின் விளைபயன்களுள் ஒன்றாகும். இச்சீர்திருத்தங்கள் ஏற்கெனவே போதாதிருக்கின்ற பொதுக் கல்வி முறையைத் தொடர்ந்து சீரழிவுக்கும், மட்டரகமான மற்றும் பெரும்பாலும் ஒழுங்கு செய்யப்படாத கட்டிடங்களில் வழமையாய் கூட்ட நெரிசலில் மிகுந்த தனியார் பள்ளிக்கூடங்கள் பல்கிப் பெருகுதலுக்கும் வழி வகுத்திருக்கிறது. இவற்றில் ஒன்றுதான் தமிழ்நாடு [...]
இந்தியா பட்ஜெட், ஆதரவு ஏழைகளுக்காகவா..? வர்த்தகர்களுக்காகவா..?
காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் புதிய அரசாங்கம் ஜூலை 8ம்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட், கிரமப்புற மற்றும் நகர்வாழ் ஏழை மக்களை ஏமாற்றுகின்ற கண்கட்டி வித்தையாக இருக்கிறது. அவர்களில் பலர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். முந்தைய நிர்வாகத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களித்தனர். நிதியமைச்சர் பழனிப்பன் சிதம்பதரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பெருவர்த்தக நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் மீண்டும் உறுதியளிக்கின்ற வகையில் அமைந்திருக்கிறது. முன்பு ஆட்சி [...]