கேள்விக்குறியாக்கப்படும் பத்திரிக்கைச் சுதந்திரம்!

அல் ஜசீரா!

ஆப்கன் யுத்த காலத்தில் உலகின் பெரும்பாலானவர்களின் வாய் ஆச்சரியத்துடன் உச்சரித்த வார்த்தை!

பத்திரிக்கை தர்மத்தை மறந்து,மேலிருந்து வடிகட்டப் பட்டு என்ன வழங்கப் படுகிறதோ அதனை மட்டும் செய்தியாக கொடுக்கும் பி.பி.சி, சி.என்.என் பிரசுரிக்கும் செய்திகளை அப்படியே அட்சரம் பிசகாமல் உலகிலுள்ள மற்ற ஊடங்களும் வழங்கிக்கொண்டிருந்த சமயம், துணிந்து நேரடியாக யுத்த களம் சென்று நேரடி ஒளிபரப்புகளைச் செய்து அமெரிக்காவின் விகாரமான முகத்தை முதன் முதலில் ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டி மக்கள் மனதில் குறுகிய காலத்தில் நீங்கா இடம் பிடித்த தொலைக் காட்சி சானல். Read More »

இந்திய ஆராய்ச்சியாளரின் வேண்டுகோள்

சர்வதேச ஹிஜ்ரா நாட்காட்டியை முஸ்லிம்களுக்கு அறிமுகப்படுத்தி அனைவரும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட உதவ வேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்களின் கூட்டமைப்புக்கு அலி மனிக்ஃபான் என்ற இந்திய ஆராய்ச்சியாளர் கேட்டுக்கொண்டார்.

alimanikfan இந்திய ஹிஜ்ரா கமிட்டியின் (கோழிக்கோடு) அமைப்பாளரான அவர், புனித உம்ரா பயணத்திற்கிடையில் மக்காவின் நுழைவாயில் எனப் போற்றப்படும் ஜித்தா நகரில் நடைபெற்ற பல பத்திரிக்கை சந்திப்புகளிலும், பல்வேறு பிறை கருத்தரங்குகளிலும் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். Read More »

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக நாடகம்


ஆப்கானிஸ்தானில் ஜனநாயக நாடகத்தை அமெரிக்கா தயாரிக்கிறது!

afghan ஆப்கானிஸ்தானில் அதிக அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் முதலில் ஜூன் மாதம் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது, அது இருமுறை தாமதப்படுத்தப்பட்ட பின்னர் அக்டோபர் 9ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஜூன் மாதத்தில் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல்களும் அடுத்த ஏப்ரல் வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. Read More »

கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு சீனாவை சீர்குலைத்துள்ளது!

சீனாவில் கிடைக்கின்ற மலிவு ஊழியத் தொழிலாளர்களை பெருமளவில் பயன்படுத்திக் கொள்வதற்காக அதிவேகமாக வெளிநாட்டு முதலீடுகள் வந்து குவிந்ததால் நாட்டின் அடிப்படை உடகட்டமைப்பு சீர்குலைகின்ற அளவுக்கு கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத மிகவும் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை நெருக்கடி உருவாகியுள்ளது. Read More »

கேள்விக்குறியாக்கப்படும் பத்திரிக்கைச் சுதந்திரம்!

அல் ஜசீரா!
ஆப்கன் யுத்த காலத்தில் உலகின் பெரும்பாலானவர்களின் வாய் ஆச்சரியத்துடன் உச்சரித்த வார்த்தை!
பத்திரிக்கை தர்மத்தை மறந்து,மேலிருந்து வடிகட்டப் பட்டு என்ன வழங்கப் படுகிறதோ அதனை மட்டும் செய்தியாக கொடுக்கும் பி.பி.சி, சி.என்.என் பிரசுரிக்கும் செய்திகளை அப்படியே அட்சரம் பிசகாமல் உலகிலுள்ள மற்ற ஊடங்களும் வழங்கிக்கொண்டிருந்த சமயம், துணிந்து நேரடியாக யுத்த களம் சென்று நேரடி ஒளிபரப்புகளைச் செய்து அமெரிக்காவின் விகாரமான முகத்தை முதன் முதலில் ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டி மக்கள் மனதில் குறுகிய காலத்தில் நீங்கா இடம் [...]

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக நாடகம்

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக நாடகத்தை அமெரிக்கா தயாரிக்கிறது!

ஆப்கானிஸ்தானில் அதிக அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் முதலில் ஜூன் மாதம் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது, அது இருமுறை தாமதப்படுத்தப்பட்ட பின்னர் அக்டோபர் 9ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஜூன் மாதத்தில் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல்களும் அடுத்த ஏப்ரல் வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

இந்திய ஆராய்ச்சியாளரின் வேண்டுகோள்

சர்வதேச ஹிஜ்ரா நாட்காட்டியை முஸ்லிம்களுக்கு அறிமுகப்படுத்தி அனைவரும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட உதவ வேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்களின் கூட்டமைப்புக்கு அலி மனிக்ஃபான் என்ற இந்திய ஆராய்ச்சியாளர் கேட்டுக்கொண்டார்.
இந்திய ஹிஜ்ரா கமிட்டியின் (கோழிக்கோடு) அமைப்பாளரான அவர், புனித உம்ரா பயணத்திற்கிடையில் மக்காவின் நுழைவாயில் எனப் போற்றப்படும் ஜித்தா நகரில் நடைபெற்ற பல பத்திரிக்கை சந்திப்புகளிலும், பல்வேறு பிறை கருத்தரங்குகளிலும் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தொகை – மாறிவரும் நிலைப்பாடுகள்.

நாட்டின் மிக முக்கியப் பிரச்னையாகவும் – பிற பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணமாகவும் இந்திய அரசாலும் அரசியல்வாதிகளாலும் கூறப்படுவது மக்கள் தொகைப் பெருக்கம் ஆகும். இதையே மீடியாக்களும் முடிந்த அளவுக்கு ஊதிக்கொண்டிருக்கின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகைப் பெருக்கம் தடையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஊழல்வாதிகளும், ஊழலை ஒழித்துக்கட்ட இயலாத அரசியல் சட்டஅமைப்பும் ஒளிந்து கொள்வதற்குக் கிடைத்த உதவாக்கரை காரணம் தான் மக்கள் தொகைப் பெருக்கம் என்று நிரூபிக்கும் முகமாக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பகத் தலைவர் ஏ.ஆர். நந்தா டெல்லியில் [...]

தமிழ்நாடு-கும்பகோணம் தனியார் பள்ளிக்கூடத்தில் தீவிபத்து, 90 குழந்தைகளைக் கொன்றது.

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 90 குழந்தைகள் இறந்தது நாடுமுழுவதும் தனியார் மற்றும் பொதுத்துறை பள்ளிகளின் திகைப்பூட்டும் நிலையை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறது. இந்தத் துயரச் சம்பவம் பதினைந்து ஆண்டுகால சந்தை சீர்தீருத்தங்களின் விளைபயன்களுள் ஒன்றாகும். இச்சீர்திருத்தங்கள் ஏற்கெனவே போதாதிருக்கின்ற பொதுக் கல்வி முறையைத் தொடர்ந்து சீரழிவுக்கும், மட்டரகமான மற்றும் பெரும்பாலும் ஒழுங்கு செய்யப்படாத கட்டிடங்களில் வழமையாய் கூட்ட நெரிசலில் மிகுந்த தனியார் பள்ளிக்கூடங்கள் பல்கிப் பெருகுதலுக்கும் வழி வகுத்திருக்கிறது.
இவற்றில் ஒன்றுதான் [...]